/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்வழிப்பாதையில் துாய்மைப்பணி: களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை
/
நீர்வழிப்பாதையில் துாய்மைப்பணி: களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை
நீர்வழிப்பாதையில் துாய்மைப்பணி: களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை
நீர்வழிப்பாதையில் துாய்மைப்பணி: களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை
ADDED : ஆக 15, 2024 11:37 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பாலங்களின் நீர்வழிப் பாதை துாய்மை செய்யும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருவமழை பெய்கிறது. தொடர், பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், நீர்நிலைகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், நீர்வழிப்பாதைகள் அடைப்பால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அவற்றை துாய்மை செய்யும் பணியில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.
அதில், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரோடுகளிலும் உள்ள, பெரிய பாலங்கள் மற்றும் சிறு பாலங்களில் நீர்வழிப்பாதை சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தடைபடாமல் செல்லும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் முழுவதும், பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, வால்பாறை ரோடு, நடுப்புணி மற்றும் வடக்கிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலங்களின் கீழ் உள்ள நீர்வழிப்பாதைகள் துாய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப்பணிகள் அனைத்தும் இம்மாதம் இறுதிக்குள் முடிக்க விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன,' என்றனர்.
* கிணத்துக்கடவு நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்கு உட்பட்ட அதிகாரிகள், கிணத்துக்கடவு மற்றும் சுல்தான்பேட்டை பிரிவுகளுக்கு உட்பட்ட ரோடுகளில் உள்ள அனைத்து பாலங்களிலும், நீர் வழிப்பாதையை சுத்தம் செய்து, பாலங்களுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணியை மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.