/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல் வார்டுகளில் இணை இயக்குனர் ஆய்வு
/
காய்ச்சல் வார்டுகளில் இணை இயக்குனர் ஆய்வு
ADDED : செப் 04, 2024 11:31 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், காய்ச்சல் வெளிநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவை, கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் ஆய்வு செய்தார்.
காய்ச்சல் வார்டுகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள், மாத்திரை, மருந்துகள் இருப்பு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:
மழை காலமாக உள்ளதால் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அதற்கு முன்னேற்பாடு என்ன செய்யப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு, பெண்கள் மற்றும் ஆண்கள் மருத்துவ பிரிவில் காய்ச்சல் நோயாளிகளுக்கு, 50 உள்நோயாளிகள் இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும், 50 முதல் 100 பேர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக தினமும், 10 முதல் 20 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உடனே எந்த காய்ச்சல் என்று கண்டறியப்பட்டு அதற்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வேண்டிய வெந்நீர், அரிசி கஞ்சி, நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது. அதிகமான நீர்ச்சத்து இழப்பு உள்ள நோயாளிகள், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு குளுக்கோஸ் செலுத்தப்படுகிறது.
அவர்களுக்கு வேண்டிய மருந்து மாத்திரைகள் போதுமான அளவில் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்