/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரைக்கு கூடுதல் விலை தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
/
கொப்பரைக்கு கூடுதல் விலை தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
கொப்பரைக்கு கூடுதல் விலை தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
கொப்பரைக்கு கூடுதல் விலை தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 27, 2025 12:11 AM
அன்னூர்: ஏல விற்பனையில், தேங்காய் கொப்பரைக்கு, கூடுதல் விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், புதன்தோறும் வேளாண் விளை பொருட்கள் ஏல விற்பனை நடைபெறுகிறது. நேற்று ஏலத்திற்கு 13 மூட்டை தேங்காய் கொப்பரைகளை, விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் குறைந்தபட்சமாக, ஒரு கிலோ 125 ரூபாய் 76 பைசா முதல், அதிகபட்சமாக 147 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறுகையில், ''தேங்காய் கொப்பரை மற்றும் விளை பொருட்களை, புதன் தோறும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வரலாம். எந்த இடைத்தரகர் கட்டணமும் செலுத்த தேவையில்லை,'' என்றார்.