/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோயம்புத்துார் புத்தக திருவிழா 2024 துவக்கம்
/
கோயம்புத்துார் புத்தக திருவிழா 2024 துவக்கம்
ADDED : ஜூலை 19, 2024 11:06 PM
கோவை;கோவை அவிநாசிரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடக்கும், 'கோயம்புத்துார் புத்தக திருவிழா 2024' கண்காட்சி நேற்று துவங்கியது.
காலை 10:00 முதல் இரவு 8:00 மணிவரை காண்காட்சியை காண முடியும். வரும் 28 வரை 10 நாட்கள் நடக்கும் நிகழ்வில், ஒவ்வொரு நாளும் பொழுதுபோக்கு, அறிவுசார் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஒவ்வொரு நாள் பகலிலும், மாலை 6.00 மணிக்கும் புத்தக கருத்தரங்குகள், பட்டிமன்றம், பேச்சாளர், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அனுமதி இலவசம்.
கண்காட்சியை, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விருந்தினராக பங்கேற்றார். கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். புத்தக கண்காட்சியின் தலைவர் ரமேஷ், புத்தக திருவிழா பற்றி விளக்கினார்.
புத்தக திருவிழாவில் இன்று காலை 11:00 மணிக்கு, கோவை கலாலயம் நாடக குழுவினரின் சீனு எழுதிய, 'சொர்க்கம் நம் கையில்' நாடகம் நடக்கிறது.
தினமலர் நாளிதழ் அரங்கு
புத்தக திருவிழாவில், தினமலர் நாளிதழ் அரங்கு இடம் பெற்றுள்ளது. 124 து அரங்கில், தினமலர் நாளிதழில் வாரமலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர் வெளியான கட்டுரைகள், செய்தி பிரிவினர் எழுதிய கட்டுரைகள் புத்தக வடிவில் வாங்கலாம். சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன. புத்தகங்கள் மட்டுமின்றி, தினமலர் நாளிதழுக்கான ஆண்டு சந்தாவையும் இங்கு செலுத்த முடியும்.