/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டி; இரண்டாம் சுற்றில் அணிகள் அதிரடி
/
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டி; இரண்டாம் சுற்றில் அணிகள் அதிரடி
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டி; இரண்டாம் சுற்றில் அணிகள் அதிரடி
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டி; இரண்டாம் சுற்றில் அணிகள் அதிரடி
ADDED : மார் 06, 2025 10:18 PM
கோவை; 'கோவை டைஸ்' கிரிக்கெட் இரண்டாவது சுற்றில் ஸ்டடி வோர்ல்டு இன்ஜி., கல்லுாரி அணியை, சி.ஐ.டி., சி.சி., அணி வென்றது.
கோவை மாவட்டத்தில் உள்ள இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கு இடையே 'கோவை டைஸ்' போட்டி, சி.ஐ.டி., கல்லுாரியில் நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 15ம் தேதி வரை வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே நடக்கிறது.
முதற்கட்டமாக, 20 அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது. முதல் நாள் முதல் சுற்று முடிந்து நேற்று இரண்டாம் சுற்று போட்டிகள் துவங்கின. முதல் போட்டியில், ஸ்டடி வோர்ல்டு இன்ஜி., கல்லுாரி அணியும், சி.ஐ.டி., சி.சி., அணியும் மோதின. பேட்டிங் செய்த ஸ்டடி வோர்ல்டு கல்லுாரி அணி, 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 81 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய சி.ஐ.டி., சி.சி., அணி, 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடர்ந்து, கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும், குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கே.பி.ஆர்., அணி, 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 126 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய குமரகுரு அணி, 15 ஓவர்களில், 5 விக்கெட்டுக்கு, 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எஸ்.கே.சி.இ.டி., அணியும், சி.ஐ.இ.டி., அணியும் மோதிய போட்டியில், 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 151 ரன்களை எஸ்.கே.சி.இ.டி., அணி முதலில் குவித்தது. அடுத்து விளையாடிய சி.ஐ.இ.டி., அணி, 20 ஓவர்களில், 8 விக்கெட்டுக்கு, 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.

