/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை போலீசின் 'போலீஸ் அக்கா' திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்த அறிவுரை
/
கோவை போலீசின் 'போலீஸ் அக்கா' திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்த அறிவுரை
கோவை போலீசின் 'போலீஸ் அக்கா' திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்த அறிவுரை
கோவை போலீசின் 'போலீஸ் அக்கா' திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்த அறிவுரை
ADDED : செப் 02, 2024 11:02 PM
கோவை:கோவை மாநகர போலீசாரின் 'போலீஸ் அக்கா' திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் பாலியல் ரீதியாக பெண்கள், மாணவியர் துன்புறுத்தப்படுவதை தடுக்க நேற்று தலைமை செயலாளர் முருகானந்தம் வீடியோ கான்பரன்சிங் கூட்டம் நடத்தினார். கோவை நிர்மலா கல்லுாரியில், இக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், அனைத்து கல்லுாரிகளிலும், உள்ளூர் புகார் குழு(ஐ.சி.சி., கமிட்டி) இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதில் தெரிவிக்கப்படும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கல்லுாரியிலும் போதை தடுப்பு கமிட்டி கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.
மாதம் ஒரு முறை, அதன் செயல்பாடுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆலோசகர்கள் நியமித்து கல்வி, அவர்களது சொந்த பிரச்னைகள், கல்வி மேம்பாட்டுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
அவர்கள் தவிர, மாணவர்கள் தங்களது சக வயதுடையவர்களிடம் பகிரும் விதமாக மாணவர்கள் இருவரை ஆலோசகர்களாக நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதந்தோறும், உயர் மட்ட அளவில் உள்ள அலுவலர்கள் கல்லுாரிகள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கூட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி கல்லுாரிகளின் முதல்வர்கள், மருத்துவக் கல்லுாரி டீன்கள், இன்ஜினியரிங் கல்லுாரி, வனக்கல்லுாரி, பாரா மெடிக்கல், நர்சிங் கல்லுாரிகளின் முதல்வர் என, 700 பேர் பங்கேற்றனர்.
கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., கார்த்திகேயன், மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.