யு.ஐ.டி., கல்லூரி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள்
யு.ஐ.டி., கல்லூரி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள்
ADDED : ஆக 30, 2026 06:02 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்லூரி நிறுவனங்களின் வளாகத்தில், தமிழ்நாடு ஊர்க்காவல் படை கோவை சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
தமிழ்நாடு காவல்துறையின் அங்கமான ஊர்க்காவல் படையினர், காவல் துறையோடு இணைந்து பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஊர்க்காவல் படையினருக்கு புத்துணர்வு அளிக்க, ஆண்டுதோறும் மாநில அளவில் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. தமிழ்நாடு ஊர்க்காவல் படையின் கோவை சரக தளபதி தனசேகர் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
நிகழ்ச்சிக்கு, யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர், கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் பிரதேச தளபதி சண்முகம் முன்னிலை வகித்தார்.
விளையாட்டுப் போட்டிகளில், கோவை சரகத்தைச் சார்ந்த கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
50 மீட்டர் ஓட்டம், 100 மீ, 200 மீ, 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், வாலிபால், கபடி ஆகிய போட்டிகள் நடந்தன.
இதில் வெற்றி பெற்ற அணியினர் அடுத்த மாதம் தேனியில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஊர் காவல் படை பிரதேச தளபதிகள், துணை பிரதேச தளபதிகள், படை தளபதிகள், காவல் சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்க்காவல் படையின் படை தளபதி ஜெய்குமார் நன்றி கூறினார்.
