/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகளுக்கான டேபிள் டென்னிஸ்: பி.எஸ்.ஜி., கல்லுாரி 'டாப்'
/
கல்லுாரிகளுக்கான டேபிள் டென்னிஸ்: பி.எஸ்.ஜி., கல்லுாரி 'டாப்'
கல்லுாரிகளுக்கான டேபிள் டென்னிஸ்: பி.எஸ்.ஜி., கல்லுாரி 'டாப்'
கல்லுாரிகளுக்கான டேபிள் டென்னிஸ்: பி.எஸ்.ஜி., கல்லுாரி 'டாப்'
ADDED : செப் 05, 2024 12:19 AM

கோவை : கல்லுாரிகளுக்கு இடையேயான 'டேபிள் டென்னிஸ்' போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி முதல் பரிசை தட்டிசென்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 'டேபிள் டென்னிஸ்' போட்டி நேற்று துவங்கியது. மாணவர், மாணவியர் என, இரு பாலருக்குமான போட்டிகளை, கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் துவக்கிவைத்தார்.
நேற்று நடந்த மாணவர்களுக்கான போட்டியில், 20 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' அடுத்து நடந்த 'லீக்' சுற்றில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, பாரதியார் பல்கலை, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரி ஆகிய நான்கு அணிகள் விளையாடின.
'லீக்' போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி, பாரதியார் பல்கலையை, 3-0 என்ற செட் கணக்கில் வென்றது.
தொடர்ந்து, கொங்கு கல்லுாரி அணி, 3-1 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா கல்லுாரி அணியையும் வென்றது.
கிருஷ்ணா கல்லுாரி அணி, பாரதியார் பல்கலை அணியை, 3-0 என்ற செட் கணக்கில் வென்றது.
பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில், கொங்கு கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து, பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி அணியையும், கொங்கு கல்லுாரி அணி, 3-1 என்ற செட் கணக்கில் பாரதியார் பல்கலை அணியையும் வென்றது.
முடிவில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி முதலிடத்தை தட்டிச்சென்றது. கொங்கு கல்லுாரி இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மூன்றாம் இடத்தையும், பாரதியார் பல்கலை அணி நான்காம் இடத்தையும் பிடித்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் பரிசுகள் வழங்கினார். இன்று மாணவியருக்கான போட்டிகள் நடக்கின்றன.