/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீளமேடு ரயில்வே சுரங்கப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்
/
பீளமேடு ரயில்வே சுரங்கப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்
பீளமேடு ரயில்வே சுரங்கப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்
பீளமேடு ரயில்வே சுரங்கப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்
ADDED : செப் 09, 2024 01:37 AM
கோவை:கோவை பீளமேடு - காந்தி மாநகர் இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை, 15 (2) நோட்டீஸ் வெளியிட்டு, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கியுள்ளது.
கோவையில் பீளமேடு - இருகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கடவு எண்: 7க்கு மாற்றாக, பீளமேடு - காந்தி மாநகர் இடையே ரயில்வே பாதையை கடக்க, ஐந்தாண்டுகளுக்கு முன், ரூ.30 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது.
அப்போதே, இப்பகுதி மக்களின் வசதிக்காக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்; இருபுறமும் சேவை சாலை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ரயிலில் அடிபட்டு பலரும் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்ததால், அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க, ரயில்வே நிர்வாகம் முன்வந்தது.
அதற்கு தேவையான நிலம் கையகப்படுத்திக் கொடுக்க, தமிழக அரசிடம் கோரியது.
மாநில நெடுஞ்சாலைத்துறை நிலம் கையகப்படுத்தும் பிரிவினர் ஆய்வு செய்து, 16 இனங்களாக, 1,194.40 சதுர மீட்டர் பரப்புள்ள இடங்களை கையகப்படுத்த, முடிவு செய்திருக்கிறது.
இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க, 15 (2) நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
இனி, இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்திருக்கிறது.
இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கோபால் என்பவர் கேட்ட கேள்விகளுக்கு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (நபார்டு, கிராமச்சாலைகள்) விஸ்வநாதன் அளித்துள்ள பதிலில், 'பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை மற்றும் சேவை சாலை அமைக்க, நிலம் எடுப்பதற்கு, 15 (2) அறிவிப்பு வெளியிடப்பட்டு, நிலம் எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலம் எடுப்பு பணி முடிந்ததும், திருத்திய நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளார்.