/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமுதாய அமைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
சமுதாய அமைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 21, 2024 11:44 PM
பொள்ளாச்சி : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள், தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
இப்பணியிடத்துக்கு கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர், 35 வயதிற்குட்பட்டவராக இருப்பது அவசியம், ஆக., 5ம் தேதியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு சார்ந்த திட்டங்களில் விரிவான களப்பணி வாயிலாக குறைந்தது ஓராண்டு கால அனுபவம் இருப்பது அவசியம்.
எம்.எஸ்.வேர்டு, எக்செல் ஆகிய கம்ப்யூட்டர் பாடங்களை படித்து, பயன்படுத்த தெரிந்தவராக இருப்பது அவசியம். பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து, தீர்மானம் நிறைவேற்றி அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். நல்ல பேச்சுத்திறன் இருப்பவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். டிரைவிங் லைசென்ஸ் இருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இத்தகுதிகள் உள்ளவர்கள், வரும் 30ம் தேதிக்குள், இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-வது தளம், பழைய கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகம், கோவை- 641 018' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.