/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழுதான காலணி விற்றதால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு
/
பழுதான காலணி விற்றதால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு
ADDED : ஆக 20, 2024 01:08 AM
கோவை;டேமேஜ் ஆன காலணி விற்றதால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
சுந்தராபுரம், பொள்ளாச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சந்திரமோகன், ஆர்.எஸ்.புரத்திலுள்ள பேட்டா ேஷாரூமில், 2023, மே 5ல், 2,799 ரூபாய்க்கு காலணி வாங்கினார். வீட்டிற்கு சென்றுபார்த்த போது, பயன்படுத்த முடியாதபடி 'டேமேஜ்' ஆகி இருந்தது.
இதனால், அந்த காலணியை திருப்பிக் கொடுத்து விட்டு, பணம் கேட்டார். டேமேஜ் ஆன காலணி குறித்து, கம்பெனிக்கு மெயில் அனுப்பி, பதில் வந்தவுடன் பணத்தை திருப்பித் தருவதாக மேலாளர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், பல மாதங்களாகியும் பணத்தை திருப்பி தரவில்லை. நோட்டீஸ் அனுப்பியும், பதில் அளிக்கப்படவில்லை.
இதனால் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சந்திரமோகன் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'எதிர் மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், காலணிக்கான தொகை, 2,799 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 3,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

