ADDED : ஆக 02, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: தமிழ்நாடு மின்வாரிய பணி நிறைவு பொறியாளர்களின், 9ம் ஆண்டு இரண்டாவது சந்திப்பு கூட்டம் பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள தனியார் ேஹாட்டலில் நடந்தது. அதில், பங்கேற்ற பொறியாளர்கள் தங்களின் பணிக்கால நினைவுகளை சக பொறியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ., நித்தியானந்தன் பங்கேற்று, பொள்ளாச்சி தொகுதியின் மேம்பாட்டுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடினார்.
செயலாளர் காமாட்சி சுந்தரம் நன்றி கூறினார். அமைப்பின் பொறுப்பாளர்கள், உடல் நலம் குன்றிய, வயது முதிர்ந்த, மூத்த பொறியாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
