/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; இந்து முன்னணி முடிவு
/
300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; இந்து முன்னணி முடிவு
300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; இந்து முன்னணி முடிவு
300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; இந்து முன்னணி முடிவு
ADDED : செப் 02, 2024 01:56 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் தாலுகா மற்றும் அன்னுாரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 300 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய, இந்து முன்னணி தீர்மானித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் மற்றும் அன்னுாரில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா செப்டம்பர், 7ம் தேதி துவங்கி, 9ம் தேதி முடிய மூன்று நாட்கள் கொண்டாடுவது. மேட்டுப்பாளையம் நகரில், 85 இடங்களிலும், காரமடையில், 140, சிறுமுகை, 35 மற்றும் அன்னுாரில், 40 இடங்களில் என மொத்தம், 300 இடங்களில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மூன்று நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழாவில், முதல் நாள் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்த பின், கோ பூஜையும், குழந்தைகள் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். இரண்டாம் நாள் விளக்கு பூஜை. மூன்றாம் நாள் அன்னதானம் வழங்குவது. இவ்வாறு விழாக்களை நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல், பொருளாளர் ரவிபாரதி, குமார், செயற்குழு உறுப்பினர் மந்திரி, அன்னுார் கார்த்திக், பிரதீப், பொறுப்பாளர் சதீஷ்குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.