sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பழைய பாடத்திட்டத்தை தொடருங்கள் ': பாரதியார் பல்கலையின் தாமத அறிவிப்பால் மாணவர்கள் அவதி

/

'பழைய பாடத்திட்டத்தை தொடருங்கள் ': பாரதியார் பல்கலையின் தாமத அறிவிப்பால் மாணவர்கள் அவதி

'பழைய பாடத்திட்டத்தை தொடருங்கள் ': பாரதியார் பல்கலையின் தாமத அறிவிப்பால் மாணவர்கள் அவதி

'பழைய பாடத்திட்டத்தை தொடருங்கள் ': பாரதியார் பல்கலையின் தாமத அறிவிப்பால் மாணவர்கள் அவதி


ADDED : செப் 15, 2024 11:53 PM

Google News

ADDED : செப் 15, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : நடப்பு கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய பாடத்திட்டம் குறித்து தாமதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவது கடினமாகி உள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

பாரதியார் பல்கலை, தன்னாட்சி கல்லுாரிகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், 100க்கும் மேற்பட்ட பாடத்திட்ட குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை, பாடத்திட்டங்கள் ஆய்வு செய்து மாற்றங்கள் ஏற்படுத்தும். அதேசமயம், ஆண்டுதோறும் மாற்றங்கள் தேவையா என்பதையும் ஆய்வு செய்து, தேவையிருப்பின் மாற்றிக்கொள்ள இயலும்.

பழைய பாடத்திட்டம் தொடருமா அல்லது மாற்றங்கள் உள்ளதா என்பதை, கல்வியாண்டு துவங்கும் முன் பல்கலை அறிவிக்கும். இணையதளத்திலும் வெளியிடும். நடப்பாண்டு, வகுப்புகள் துவங்கி, ஒன்றரை மாதங்களுக்கு பின், பழைய பாடத்திட்டத்தையே தொடர பல்கலை அறிவித்துள்ளது.

பாரதியார் பல்கலையில் கடந்த, மார்ச் மாதமே பாடத்திட்ட குழுக்கள் முதல்கட்ட பணிகளை துவக்கினர். பாடத்திட்ட குழுக்கள் பல்வேறு மாற்றங்களை பரிந்துரைத்தும், பல்கலை நிர்வாகம் பழைய பாடத்திட்டத்தை பின்பற்ற கூறியது ஏன் என்ற குழப்பமும் எழுந்துள்ளது.

மேலும், கேள்வித்தாள் அமைக்கும் குழுக்களில் தகுதியற்றவர்களை நியமிப்பது, மதிப்பீட்டில் தன்னாட்சி பெற்ற கல்லுாரியினர் தன்னாட்சி இல்லாத கல்லுாரி தாள்களை திருத்துவதால் மதிப்பெண்களில் வேறுபாடு பெருமளவில் ஏற்படுவது என பல்வேறு புகார்கள் முதல்வர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசு கல்லுாரி முதல்வர் வீரமணி கூறுகையில்,''பாடத்திட்ட குழுக்கள் தலைவர்களின் வாய்மொழி தகவல்படி, கல்லுாரிகள் புதிய மாற்றத்திற்கு ஏற்ப பாடங்கள் நடத்தப்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை துவங்கி இருக்க கூடாது; அதே சமயம் பழைய பாடத்திட்டதை பின்பற்ற குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்னரே தெரிவித்திருக்கவேண்டும். தாமதத்தால், கல்லுாரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும், பல பாடங்களை சிறப்பு வகுப்புகள் வைத்து எடுக்கவேண்டியுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் கணிதத்தை நீக்கி விட்டு, 'எம்படட் சிஸ்டம்' சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது பழைய பாடத்திட்டம் என்பதால், கணித பாடத்தை நடத்த வேண்டியுள்ளது.

ஆங்கிலத்தில், ரூ. 400 செலவிட்டு பெற்ற புத்தகம் வீணாகியுள்ளது. இக்குளறுபடிகளை நீக்க ஆறு மாதத்துக்கு ஒரு முறை செனட் கூட்டம் நடத்தவேண்டும்.

அதையும் நடத்தாமல் பல்கலை நிர்வாகம் என்னதான் செய்கிறது என புரியவில்லை,'' என்றார்.

பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பொன்பாண்டியன் கூறுகையில்,''பாடத்திட்டங்கள் வடிவமைப்பில் எனக்கு பொறுப்பு இல்லை. இறுதி செய்யப்படும் பாடத்திட்டத்தை வைத்து தேர்வுகளை நடந்துவோம்.

மதிப்பீட்டு பணிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது; வெறும் தன்னாட்சி இல்லாத கல்லுாரி ஆசிரியர்களை கொண்டு மட்டும் நடத்த இயலாது. இதுகுறித்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை. புகார் வரும் பட்சத்தில், உரிய ஆய்வு மேற்கொள்வோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us