ADDED : ஜூலை 20, 2024 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே கனமழை பெய்ததில், இரண்டு வீடுகள் விழுந்து சேதமடைந்தது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சிறு இடைவெளி விட்டு, கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ராமபட்டணத்தில் கவுசல்யா என்பவரது வீட்டின் மண் சுவர் வீடு இடிந்து விழுந்தது; அதில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இது போன்று, ஜமீன் முத்துார் அரண்மனை வீதியில்,சின்னச்சாமி என்பவரது வீட்டு சுவர், பஞ்சலிங்கம் என்பவரது வீட்டின் மீது விழுந்தது. அதில், பஞ்சலிங்கம் மகன் கனகசபாபதி,23 என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

