/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு தீவிரம் 250 கேமரா இணைப்புடன் கட்டுப்பாட்டு அறை
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு தீவிரம் 250 கேமரா இணைப்புடன் கட்டுப்பாட்டு அறை
ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு தீவிரம் 250 கேமரா இணைப்புடன் கட்டுப்பாட்டு அறை
ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு தீவிரம் 250 கேமரா இணைப்புடன் கட்டுப்பாட்டு அறை
ADDED : ஏப் 21, 2024 11:47 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்துக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், மத்திய துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி ஓட்டு எண்ணும் மையத்துக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் முத்துக்குமார், சுரேஷ்குமார் மற்றும், எட்டு டி.எஸ்.பி.,க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பட்டாலியன் போலீசார் 100 பேர், துணை ராணுவம் - 15, ஆயுதப்படை போலீசார் - 55, உள்ளூர் போலீசார் - 200 என, மொத்தம் 390 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுழற்சி அடிப்படையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் ஓட்டு எண்ணும் மையத்தை கண்காணிக்க மொத்தம், 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர் தவிர யாரையும் அனுமதிப்பதில்லை. அரசியல் கட்சி முகவர்கள் முறையான அனுமதி பெற்று வந்தால், கட்டுப்பாட்டு அறையிலுள்ள 'டிவி' வாயிலாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்த்துக்கொள்ள முடியும். ஒரு கட்சிக்கு ஒரு நபர் மட்டுமே வர வேண்டும். ஜூன், 4ம் தேதி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு, கூறினர்.

