/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடலுக்கு குளிர்ச்சி தரும்... 'சம்மர் கூலிங் பிராணயாமா!'
/
உடலுக்கு குளிர்ச்சி தரும்... 'சம்மர் கூலிங் பிராணயாமா!'
உடலுக்கு குளிர்ச்சி தரும்... 'சம்மர் கூலிங் பிராணயாமா!'
உடலுக்கு குளிர்ச்சி தரும்... 'சம்மர் கூலிங் பிராணயாமா!'
ADDED : மே 01, 2024 11:45 PM

கோவை : வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலில், 'சம்மர் கூலிங் பிராணயாமா' செய்து உடலை ஜில்லென்று வைத்துக் கொள்ளலாம் என்கிறார், யோகா தெரபி ஸ்பெஷலிஸ்டும், நேச்சுரோபதி மருத்துவருமான ஸ்ரீகுமார்.
அவர் கூறியதாவது:
கடும் கோடை வெயிலால் உடலில் எரிச்சல், வியர்வை, தாகம் போன்றவை அதிகரிக்கும். வேலைகளைச் செய்வதில் சோர்வு ஏற்படும். இதனால் நாம் அன்றாடம் செய்யக்கூடிய, வேலைகளைக் கூட தள்ளிவைத்துவிடலாம் என்ற மனப்போக்கு உருவாகும்.
சம்மரில் 'ஹீட் ஸ்டிரோக்' தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் 'ஹீட் ஸ்டிரோக்' என்பது, வயதானவர்களுக்கு மட்டுமே வந்து கொண்டிருந்தது.
ஆனால், இப்போது இளைஞர்களும் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.
வெயிலை சமாளித்து, உடலை குளிர்ச்சியாக்க தாகம் எடுக்கும்போது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட இடைவெளியில் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரை கட்டாயமாக குடிக்க வேண்டும்.
தர்பூசணி, மோர், வெள்ளரி, கிர்னிப் பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
சம்மர் கூலிங் பிரீத்திங்
இத்துடன், 'சம்மர் கூலிங் பிரீத்திங் அல்லது பிராணாயாமா' எனும் இயற்கையிலேயே குளிர்ச்சியைத் தரும் பிராணயாமம் உதவியாக இருக்கும்.
சீதலி, சீத்கரி, சடந்தா, பிரம்மரி ஆகிய 4 பிராணயாமாக்களை தலா 3 நிமிடம் என, 12 நிமிடங்கள் காலை, மாலை செய்து வந்தால், நம் உடலில் உள்ள அதீத வெப்பம் வெளியேறி, மெது மெதுவாக உடல் குளிர்ச்சியாகும்.
இப்பயிற்சி, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, நார்மல் லெவலுக்கு கொண்டு வந்து, ஹீட் ஸ்டிரோக் ஏற்படுவதைத் தடுக்கும். இது மட்டுமல்லாமல் ஸ்டிரெஸ், ஹார்ட் பர்ன், ஹார்ட் அட்டாக் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்க முடியும். இப்பயிற்சிகளை காலையில் சூரிய உதயத்தின்போதும், மாலையில் சூரியன் மறைவதற்கு முன்பும் செய்ய வேண்டும்.
இதன் மூலம் உடலுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைப்பதோடு, நுரையீரலின் திறனும் அதிகரிக்கும். மூளையின் செயல்பாடு மிகவும் அமைதியாக இருக்கும். இதயத்தின் ரத்த ஓட்டம் சீராகும். ஹைப்பர் டென்சன் வராது.
இவ்வாறு, அவர் கூறினார்.

