ADDED : ஆக 03, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
சாய்பாபாகாலனி: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இணைபதிவாளர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் கமுதி கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும், பணி நியமன ஆணை நிலுவையில் உள்ள துணைப் பதிவாளர்களுக்கு ஆணை வழங்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் சார்பதிவாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும், மண்டல மாறுதல் பெற்ற பணியாளர்களை சொந்த மாவட்டங்களில் பணியில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
