/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி உருவாக்குகிறது ரூ.6 கோடியில் 'புட் பிளாசா'
/
மாநகராட்சி உருவாக்குகிறது ரூ.6 கோடியில் 'புட் பிளாசா'
மாநகராட்சி உருவாக்குகிறது ரூ.6 கோடியில் 'புட் பிளாசா'
மாநகராட்சி உருவாக்குகிறது ரூ.6 கோடியில் 'புட் பிளாசா'
ADDED : ஆக 03, 2024 06:39 AM
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' வளாகத்தில், தனியார் பங்களிப்புடன் ரூ.6 கோடியில் 'புட் பிளாசா' அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 72வது வார்டு ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் 'மல்டிலெவல்' கார் பார்க்கிங் செயல்படுகிறது.
இவ்வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில், 2,282 சதுர மீட்டர் பரப்பளவில் உணவு வளாகம் (புட் பிளாசா) அமைக்க, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் இவ்வளாகம் அமைக்க, மாநகராட்சி முடிவெடுத்திருக்கிறது.
அவ்வகையில், 'செல்பி பாயின்ட்', குழந்தைகள் விளையாட்டு திடல், 10 கடைகள், அழகிய வேலைப்பாடுகளுடன் இரண்டு இடங்களில் உணவருந்துமிடம், பாரம்பரிய கட்டடக்கலையில் அமைக்கப்படும் கூரைகளுடன் இரு இடங்களில் உணவருந்தும் இடம், செயற்கை நீரூற்று, இரு சக்கர வாகன நிறுத்துமிடம், பல வண்ண விளக்குகள் மற்றும் இலவச வைபை வசதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, ஆறு கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நிதி தேவைப்படுவதால், தனியார் பங்களிப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்த, திட்ட முன்மொழிவு கோரவும், திட்ட அறிக்கைக்கு நிர்வாக அனுமதி கோரி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு பரிந்துரைக்கவும், மாமன்றம் அனுமதி அளித்துள்ளது.