/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் கொலை கண்டித்து இன்று கோர்ட் புறக்கணிப்பு
/
வக்கீல் கொலை கண்டித்து இன்று கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஆக 22, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வக்கீல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் இன்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது.
திருநெல்வேலி, வி.எம்.சத்திரத்தில், வக்கீல் சரவணராஜ், கடந்த, 20ம் தேதி, நிலத்தகராறு தொடர்பாக, வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜேக்) கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்தது. அதன்படி,கோவையில், வக்கீல் சங்கம் சார்பில், இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

