/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர்களுக்கு மூடாக்கு கோடையில் அவசியம்
/
பயிர்களுக்கு மூடாக்கு கோடையில் அவசியம்
ADDED : மே 06, 2024 10:42 PM
கிணத்துக்கடவு:கோடை காலத்தில், மழை பெய்யாத நிலையில் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி மற்றும் நெகமம் சுற்றுவட்டார பகுதியில், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, தென்னை மரத்தை விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனர்.
விவசாயி சம்பத்குமார் கூறுகையில், ''தென்னைக்கு மூடாக்கு அவசியம். உயிர் மூடாக்கு வாயிலாக, வாழை, குறுமிளகு போன்ற ஊடுபயிர் வாயிலாக தென்னைக்கு வரும் வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும் மற்றும் மண்ணின் வெப்பம் குறையும். தென்னை ஓலை, மற்றும் தேங்காய் மட்டை போன்றவைகள் வாயிலாக தென்னைக்கு கழிவு மூடாக்கு அமைக்கலாம். இதனால் மண்ணின் ஈரப்பதம் நிலைத்து இருக்கும்.
சூரிய ஒளி மண்ணில் படாதவாறு மூடாக்கு அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் மற்றும் மண் புழு அதிகரிக்கும்,'' என்றார்.