ADDED : செப் 02, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் முதலாவது டிவிஷன் போட்டி, சூர்யபாலா மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது.
ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியினர் 49.1 ஓவரில் 252 ரன் எடுத்தனர். ஆதித்யநாதன் 73 ரன் எடுத்தார். எதிரணியின் சத்யநாராயணன் நான்கு விக்கெட் வீழ்த்தினார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் டிரஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் 40.2 ஓவரில் 157 ரன் எடுத்து தோல்வியடைந்தனர். எதிரணியின் ரமேஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
