ADDED : ஜூன் 19, 2026 07:01 PM
பாரில் தகராறு; 3 பேர் கைது
சாய்பாபாகாலனி: இடையர்பாளையம் கவின்யாதவ், கோவில்மேடு பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். அதிகாலையில் வந்த மூன்று பேர் பார் கத்தியை காண்பித்து பணம், மதுபாட்டில் கேட்டு தகராறு செய்துள்ளனர். புகாரின் பேரில், சாய்பாபாகாலனி போலீசார் கவுண்டம்பாளயைத்தை சேர்ந்த அபிஷேக், 21 சந்தோஷ்குமார், 20 மதன், 30 ஆகியோரை கைது செய்தனர்.
கட்டட தொழிலாளி பலி
சரவணம்பட்டி: புதுக்கோட்டை மணிகண்டன், 27 சின்னவேடம்பட்டி பகுதியில் கட்டடத்தில் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 17ம் தேதி பணியின்போது தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் உயிரிழந்தார். சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் இளைஞர் பலி
பீளமேடு: எஸ்.ஐ.எச்.எஸ்.,பகுதி முகமது ஹகீம்ஷா,19 நண்பர் சுசில் உடன் இருசக்கர வாகனத்தில் அவிநாசி சாலை அரவிந்த் கண் மருத்துவமனை அருகே வாகனத்தை அலட்சியமாகவும், வேகமாகவும் சென்றார். நிலைதடுமாறி முன்னே சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் வாகனத்தை ஓட்டிய முகமது ஹகீம் ஷா உயிரிழந்தார். பின்னால் அமர்ந்தவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
போதைப்பொருள் விற்பனை
சிங்காநல்லுார்: இருகூர் பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்றதாக, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி நவீன், 21 என்பவரை சிங்காநல்லுார் போலீசார் கைது செய்தனர். போதைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
செல்வபுரம் : செல்வபுரம் போலீசார் ரோந்து பணியின் போது, தெலுங்குப்பாளையம்–வேடப்பட்டி சாலையில் சந்தேகப்படும் படி நின்றிருந்த நபரை சோதித்து பார்த்தனர். ஒரு கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் செல்வபுரம் கார்த்திகேயன், 31 என்பது தெரிந்தது. கஞ்சா, எடை இயந்திரத்தை பதிவு செய்தனர். பறிமுதல் செய்த கஞ்சா மதிப்பு, ரூ.80 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
மனைவியின் அண்ணன் கைது
தொண்டாமுத்துார்: சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ் ஜெப ஆனந்த்,32; மனைவி பவித்ரா. 2 குழந்தைகளுடன், வடவள்ளியில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார். குழந்தைகளை பார்க்கச் சென்ற ராஜேஷ், இளைய மகனை தன் பெற்றோருக்கு காண்பிக்க, காரில் அழைத்து சென்றுள்ளார். வேடபட்டி –- பேரூர் சாலையில் பவித்ராவின் அண்ணன் விஜய் பைக்கில் வந்து காரை மறித்தார். ராஜேஷை தாக்கி குழந்தையை துாக்கிச்சென்றார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயை கைது செய்தனர்.
