ADDED : ஜூன் 24, 2026 06:32 PM
புறா வளர்ப்பில் தகராறு
இளைஞர் மீது தாக்குல்
சாய்பாபாகாலனி: வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த விஷ்ணுவும், 23 உமாபதியும், 49 தங்கள் வீடுகளில் புறா வளர்க்கின்றனர். கடந்த 23ம் தேதி விஷ்ணு வளர்த்த புறா உமாபதியின் வீட்டு கூண்டில் அமர்ந்துள்ளது. புறாவை எடுக்க சென்றபோது, ஏற்பட்ட தகராறில் விஷ்ணுவை உமாபதி கட்டையால் அடித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்படி, சாய்பாபாகாலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசாருடன் தகராறு
பெண் மீது வழக்கு
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கைதி சூரியபிரசாத்துக்கு பாதுகாப்பு பணியில், மாநகர ஆயுதப்படை எஸ்.எஸ்.ஐ., சிவக்குமார் ஈடுபட்டு இருந்தார். கைதியின் தாய் பாக்கியலட்சுமி, 58 மகனை பார்க்க அனுமதி கேட்டார். சிறை விதிமுறைகளின்படி உரிய அனுமதி பெற்ற பிறகே பார்க்க முடியும் என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, பாக்கியலட்சுமி மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வீட்டில் பணம் திருட்டு
போலீசார் விசாரணை
காளப்பட்டி தனபால், 52 என்பவர் மனைவியுடன் வசிக்கிறார். 23ம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு இருவரும் முதல் தளத்தில் உள்ள அறையில் உறங்க சென்றனர். அதிகாலையில் வீட்டில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன. கீழ் தளத்தில் வைக்கப்பட்டு இருந்த, 3,500 ரூபாய் மட்டும் காணாமல் போனதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
5.5 சவரன் தாலி செயின்
காணாமல் போனதாக புகார்
நஞ்சுண்டாபுரம் சினேகா கணேஷ், 31 வீட்டில் வைத்திருந்த 5.5 சவரன் தாலி செயின், 45 ஆயிரம் பணம் காணாமல் போயுள்ளது. வீட்டில் பணிபுரிந்த கள்ளக்குறிச்சி சாந்தி, 51 என்பவரிடம் விசாரித்துள்ளனர். உடனடியாக பணிக்கு வருவதை சாந்தி நிறுத்தியுள்ளார். ராமநாதபுரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது.
டெம்போவேன்
மோதி ஒருவர் பலி
செல்வபுரம்–உக்கடம் , பேரூர் பைபாஸ் சாலையில் இரும்பு கம்பிகளை போதிய பாதுகாப்பின்றி ஏற்றி வந்த, டெம்போ வேன் மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த நாராயணன், 56 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த பிரியதர்ஷினி, 21 படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
போதைப்பொருள் விற்ற
ஐந்து பேர் மீது வழக்கு
தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை குறித்து போலீசார் உக்கடம், ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், சரவணம்பட்டி, ஆகிய இடங்களில் சோதனையிட்டனர். இப்பொருட்களை விற்ற, மருதமலை மல்லிகா, 54 கோட்டைமேடு குன்ஹாமத், சிவகங்கை குணநிதி, 20 வெள்ளக்கிணறு காந்திமதி, 38 கணபதி சசிபிரகாஷ், 23 ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மது விற்பனை
இருவர் கைது
சரவணம்பட்டி போலீசார் சோதனையின் போது, விதிமுறை மீறி மதுபாட்டில்களை சத்தி சாலை தனியார் பேக்கரி அருகே விற்பனை செய்து வந்த, கணபதி சண்முகவேல், 57 என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்த 14 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
