தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 


ADDED : ஜூன் 25, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கத்தியை காட்டி மொபைல்போன் பறிப்பு 

காந்திபுரம்: காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டேண்டில் நாமக்கலை சேர்ந்த மணிராஜ், 42 நின்றிருந்தார். அவரிடம் கேரளா பாலக்காட்டை சேர்ந்த விஜயக்குமார் என்பவர் கத்தியை காட்டி, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மொபைல்போனை பறித்து தப்பினார். புகாரின் பேரில்  காட்டூர் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.

போதைப்பொருள் விற்பனை; மூன்று வழக்கு பதிவு 

ஆர்.எஸ்.புரம் போலீசார் ரோந்து சென்ற போது, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, பாரதி புரத்தை சேர்ந்த பரதன், 33 இன்பரசன், 24 தடாகம் சாலை முஸ்தபா,  57  ஆகிய மூவரை கைது செய்தனர். 

மது விற்பனை; 3 பேர் கைது 

சிங்காநல்லுார் போலீசார் இருகூர் புளியமரம் பகுதியிலுள்ள காலியிடத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த அன்ஜிமுத்து, 46, என்பவரை கைது செய்தனர். மேலும், தென்காசி காளிராஜ், 22, புதுக்கோட்டை முத்து, 60 ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us