தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 


ADDED : ஜூலை 17, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கஞ்சா; நான்கு வழக்கு பதிவு 

காந்திபுரம்: கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட பிரிவின் கீழ், மாநகர போலீசார் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காட்டூர் போலீசார் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் ரத்தினபுரி சேர்ந்த சுஜீஷ் என்பவரை கைது செய்து, 2.5 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்தனர். 

* சாய்பாபாகாலனி போலீசார் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், கஞ்சய்குமரன், 19 என்பரை கைது செய்து 200 கிராம் கஞ்சா,150 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். 

* துடியலுார் போலீசார் ரோந்து பணியின் போது, வெள்ளக்கிணறு பாலம் அருகில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன், 42 கணபதியை சேர்ந்த சுதாகர், 36 ஆகியோரை கைது செய்தனர். 1.250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

* ராமநாதபுரம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  அதே பகுதியை சேர்ந்த சூர்யா, 28 கைது செய்தனர். 140 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

மது குடித்தவர் கைது 

ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் போலீசார் ரோந்து சென்றபோது, வடகோவை பகுதியில் பொது இடத்தில் அமர்ந்து மது குடித்த திலீப்குமார், 33 என்பவரை போலீசார் கைது செய்து. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us