ADDED : ஜூலை 22, 2026 06:33 PM
பைக் மோதி ஒருவர் பலி மேட்டுப்பாளையம் ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் ராமாத்தாள், 67. மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மின்சார பைக் மோதியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பைக்கை ஓட்டிய அதே பகுதியை சேர்ந்த ஜோஸ்னா, 44 மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல் * பெரியகடை வீதி போலீசார் ரோந்து பணியின் போது, பொன்னையராஜபுரம் பூங்கா அருகே புகையிலை பொருட்கள் விற்ற ராஜஸ்தானை சேர்ந்த தினேஷை கைது செய்து, 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
* செல்வபுரம் போலீசார் தெலுங்குபாளையம் பெட்டிக்கடையில், புகையிலை பொருட்களை விற்ற சுப்பிரமணியன், 64 என்பவரை கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை; இருவர் கைது பீளமேடு, விமானநிலையம் அருகே, காலியிடத்தில் கஞ்சா விற்றதாக, நீலகிரியை சேர்ந்த கிஷோர் குமார், 25 மற்றும் முரளி, 23 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மது பதுக்கியவர்கள் மீது வழக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனையின் போது, விதிமுறைகளை மீறி மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த, புதுக்கோட்டை அன்ஜிமுத்து, 40 தென்காசி காளிராஜ், 22 ஆகிய இருவரை கைது செய்தனர்.
