தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 


ADDED : ஜூலை 31, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காப்பர் கம்பி திருட்டு; ஒருவர் கைது 

வடவள்ளி : சோமையம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் அருகே சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று இருந்தார். அவரை அதே பகுதியை சேர்ந்த பிரபு, 33 என்பவர் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடம், காப்பர் கம்பிகள் இருப்பதை பார்த்து கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர் வேடபட்டி தீபக், 24 என்பதும், மூன்று கிலோ காப்பர் ஒயர் திருடியதும் தெரிந்து கைது செய்தனர். 

6.8 கிலோ கஞ்சா பறிமுதல்

சிங்காநல்லுார்:  போலீசார் ரோந்து பணியின் போது, இருகூர் சுந்தராம்பாள் கோவில் அருகே சந்தேகப்படும் படி நின்று இருந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் விற்பனைக்காக, 6.8 கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருந்தனர். விசாரணையில் அவர்கள் சூலுார் ஹக்கீம் சையத், 33 சிவகங்கை வினோத்,33 வடுகன்காளிபாளையம் ரியாசுதீன், 21 காரைக்குடி கீர்த்திவாசன், 21 என தெரிந்தது. கைதான இவர்களிடம் விசாரிக்கின்றனர். 

பெயின்டர் கொலை

சிங்காநல்லுார்: நீலிகோணாம்பாளையம் மணிகண்டன், 49; பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, அவரது மகனின் 17 வயது நண்பன் வந்தார். ‘எனது மகன் கெட்டுப்போக நீதான் காரணம்’ என மணிகண்டன் குடிபோதையில் கண்டித்துள்ளார். தகராறில் சிறுவன் அருகில் இருந்த செங்கல்லால் மணிகண்டன் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் உயிரிழந்தார். இச்சிறுவன் பத்தாம் வகுப்புக்குப் பின் பள்ளிக்கு செல்லாமல் மில்லில் வேலை பார்த்து வந்ததாக கூறிய போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us