தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 


ADDED : ஆக 02, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயங்கி விழுந்து விபத்து  கோவை: குனியமுத்துாரை சேர்ந்தவர் செல்வராஜ், 61. இவரது மனைவி, விஜயலட்சுமி, 51. பைக்கில் குட்செட் ரோட்டில் செல்லும்போது விஜயலட்சுமிக்கு மயக்கம் ஏற்பட்டதால் சாய்ந்தார். கட்டுப்பாட்டை இழந்து இருவரும் விழுந்தனர். படுகாயமடைந்த விஜயலட்சுமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். 

பஸ் மோதி இளைஞர் பலி  உப்பிலிபாளையம்:  அவிநாசி ரோடு எல்.ஐ.சி., சந்திப்பில், இரவு அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், பைக்கில் ரோட்டை கடந்த தேனியை சேர்ந்த யுவசங்கர், 23 உயிரிழந்தார். அவருடன் சென்ற சரவணகுமார்,20 காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய, தாமஸ் வீதி பஸ் டிரைவர் அமிர்தராஜ், 36 மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ரோட்டை கடந்தவர் பலி பீளமேடு: பீளமேட்டை சேர்ந்த கண்டிமுத்து, 71 அவிநாசி ரோடு தனியார் கல்லுாரி முன் ரோட்டை கடந்தபோது பைக் மோதியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பைக்கை ஓட்டிய ஜி.என்.மில்ஸ் தீபக்ராஜ், 26 மீது போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்தனர்.

கஞ்சா விற்ற இருவர் கைது  சாய்பாபா காலனி: தடாகம் ரோடு கோவில் மேடு டாஸ்மாக் மதுக்கடை அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, மேற்குவங்கம் ஹிலால், 41, உ.பி., செராஜிதீன் அன்சாரி, 45 ஆகியோரை சாய்பாபாகாலனி போலீசார் கைது செய்தனர். 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

* துடியலுாரில் கஞ்சா  பயன்படுத்தியதாக மணிகண்டன், 21, யுவராஜ், 22 ஆகியோரையும் துடியலுார் போலீசார் கைது செய்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us