ADDED : ஆக 03, 2026 08:21 PM
புகையிலை பொருட்கள் விற்பனை சரவணம்பட்டி: போலீசார் ரோந்து பணியின் போது, புகையிலை பொருட்களை விற்பனை செய்த ரத்தினபுரி ஹக்கீம், 43 சரவணம்பட்டி முத்துக்குமார், 53 ஆகியோரை கைது செய்தனர்.
கஞ்சா பயன்படுத்திய இருவர் கைது வடவள்ளி: தொண்டாமுத்துார் ரோட்டில் கஞ்சா பயன்படுத்திய கலிக்கநாயக்கன்பாளையம் ஹரி கோவிந்த், 32 ஆர்.எஸ்.புரம் தமிழ்பிரபாகரன், 30 ஆகியோரை ரோந்து போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் கஞ்சா விற்பனை நெட்வொர்க் பற்றி விசாரிக்கின்றனர்.
லாட்டரிகளுடன் இருவர் கைது வாளையார்: -வாளையார் சோதனை சாவடியில் நேற்று முன்தினம், போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த ஒருவரை விசாரித்தபோது குறிச்சி, கல்லுக்குழி, எல்.ஐ.சி. ஏஜன்ட் காலனி, ஜேசுராஜா, 49 என்பதும், தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள், 48 இருப்பதும் தெரிந்தது. மேலும் ஒருவரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி பெரும்பலையை சேர்ந்த கணபதி, 40 என்பதும், கேரள லாட்டரிகள், 40 இருப்பதும் தெரிந்தது. பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
