ADDED : ஜூலை 31, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
சிங்காநல்லுார்: நீலிகோணாம்பாளையம் மணிகண்டன், 49; பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, அவரது மகனின் 17 வயது நண்பன் வந்தார். ‘எனது மகன் கெட்டுப்போக நீதான் காரணம்’ என மணிகண்டன் குடிபோதையில் கண்டித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சிறுவன் அருகில் இருந்த செங்கல்லால் மணிகண்டன் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் உயிரிழந்தார். இச்சிறுவன் பத்தாம் வகுப்புக்குப் பின் பள்ளிக்கு செல்லாமல் மில்லில் வேலை பார்த்து வந்ததாக கூறிய போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
