வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களுக்கு வலை
காரமடை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகுல், 22. விவசாயி. இவர் காரமடையில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் ஸ்கூட்டியில் சென்றார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் மூன்று பேர், கத்தி காட்டி மிரட்டி, அவரை குருந்தமலை வள்ளியம்மன் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
பின், ராகுலிடம்இருந்த செல்போன், ரூ.8,000 பணம், ஸ்கூட்டி ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த ராகுல், அவ்வழியாக சென்ற லாரியில் உதவி கேட்டு வீட்டிற்கு சென்றார். அவரது பெற்றோர் ராகுலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு, ராகுலை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
338 கிலோ புகையிலை பறிமுதல்
அன்னூரில் போலீஸ் எஸ்.ஐ., குமார் தலைமையிலான போலீசார், நேற்று காலை வாகன சோதனை நடத்தினர்.
இதில் வேனில் தடை செய்யப்பட்ட 338 கிலோ புகையிலை பொருட்கள் பிடிபட்டன. போலீசார் புகையிலை பொருட்களையும், ஏற்றி வந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.வேனில் புகையிலைப் பொருட்களைக் கொண்டு வந்த கோவை மீனம் பாளையம், பார்த்திபன், 35. வெள்ளக்கிணறு பாலசுப்பிரமணியம், 28. ஆகிய இருவரையும் கைது செய்து அன்னூர் கோட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். -

