/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.எஸ்.ஐ., சர்ச் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்
/
சி.எஸ்.ஐ., சர்ச் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்
சி.எஸ்.ஐ., சர்ச் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்
சி.எஸ்.ஐ., சர்ச் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 06, 2024 06:46 AM

கோவை: கோவை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் ஜூன், 16ம் தேதி நடந்த பிரார்த்தனை கூட்டத்தில், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் பேசியது ஹிந்துக்களின் மத உணர்வை துாண்டும் வகையில் இருப்பதாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு, கடந்த, 2ம் தேதி இரவு ஹிந்து மக்கள் கட்சியினர், ஹிந்து முன்னணியினர் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ரேஸ் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்தனர்.
அன்றைய இரவே வழக்கும் பதிவு செய்யப்பட்டு, நான்கு பிரிவுகளில் எப்.ஐ.ஆர்., பதியப்பட்டது. நேற்று மாலை வரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் சர்ச் உறுப்பினர்களே, மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.
ஆலய வழிபாட்டில் பிரின்ஸ் கால்வின் பேசியது, ஹிந்து மதத்தின் நம்பிக்கைக்கு அவதுாறு ஏற்படுத்துவதுடன், இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும் இருப்பதாக கொதித்துப்போன சர்ச் உறுப்பினர்கள், அவரை மாற்றுமாறு பேராயர் திமோதி ரவீந்தரிடம் முறையிட்டுள்ளனர்.
ஆனாலும், நடவடிக்கை எடுக்காததால், 20க்கு மேற்பட்ட சர்ச் உறுப்பினர்கள் நேற்று சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் வளாகத்தில் கூடினர். பின்னர், அங்குள்ள அலுவலகத்தை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலய உறுப்பினர் ஜோஸ்வா டேனியல் கூறுகையில், ''எங்கள் ஆலயத்தின் புனிதமான பலிபீடத்தை, தனது சுயலாபத்துக்காக பிரின்ஸ் கால்வின் பயன்படுத்தியுள்ளார். அவரை மாற்றுமாறு பேராயர் திமோதி ரவீந்தரிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. நடவடிக்கை எடுக்கும் வரை, இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்,'' என்றார்.