/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிலம்பம்; சுகுணாபுரம் அரசுப்பள்ளி அபாரம்
/
சிலம்பம்; சுகுணாபுரம் அரசுப்பள்ளி அபாரம்
ADDED : நவ 07, 2024 08:38 PM

கோவை; சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் சிலம்பம் போட்டியில் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளிக்கல்வி துறை சார்பில், 40 வது கோவை மாவட்ட வருவாய் அளவிலான விளையாட்டு போட்டிகள் மாணவ, மாணவியருக்கு இந்துஸ்தான் கல்லுாரியில் நடந்தது. இதில், சிலம்பம், டேக்வாண்டோ, வாள் சண்டை ஆகிய போட்டிகளில், 1,000க்கும் மேற்பட்டோர் விளையாடி திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் யாதவன் வெள்ளி பதக்கமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவர் முகமது பாரிக் தங்கமும், 9ம் வகுப்பு மாணவர் குமரன் வெள்ளியும், மாணவர் ஹாரிஸ் வெண்கலமும் வென்றனர்.
அதேபோல், 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், எட்டாம் வகுப்பு மாணவி லியாஸ்ரீ தங்க பதக்கமும், 17 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், 10ம் வகுப்பை சேர்ந்த ஹாசினி மற்றும் அபிநயா ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். இதில், லியாஸ்ரீ மற்றும் முகமது பாரிக் ஆகியோர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.