/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணைப்பு பாலம் சேதம்; வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
/
இணைப்பு பாலம் சேதம்; வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
ADDED : ஆக 31, 2024 01:53 AM

வால்பாறை:வால்பாறையில், இணைப்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பலவீனமாக உள்ளதால், வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
வால்பாறை பஸ் ஸ்டாண்ட் அருகே, முடீஸ், சின்கோனா செல்லும் வழித்தடத்தில் பாலம் உள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில் உள்ள பாலம் பலவீனமாக உள்ளது. பாலத்தின் இடையே ஏற்பட்டுள்ள விரிசலில், மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதால், வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இந்த பாலம் மாட்டுத்தொழுவமாகவும், பகல் நேரத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறி வருகிறது.
பல ஆண்டுகளாக பாலம் சீரமைக்கப்படாமல் உள்ள நிலையில், பாலத்தில் மேலும், கீழும் விரிசல் ஏற்பட்டு, இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, நல்லகாத்துபாலம் வழியாக இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை செல்கின்றன. சமீப காலமாக பாலத்தின் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்ட வேண்டும்,' என்றனர்.