/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த மின் கம்பம்; காவேரி நகர் மக்கள் அச்சம்
/
சேதமடைந்த மின் கம்பம்; காவேரி நகர் மக்கள் அச்சம்
ADDED : பிப் 24, 2025 12:37 AM

சூலுார்; சூலுார் அடுத்த கலங்கல் ஊராட்சிக்கு உட்பட்டது காவேரி நகர். ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஆறாவது வீதியில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து உள்ளதால், மக்கள் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''சில மாதங்களுக்கு முன் வாகனம் மோதி, மின் கம்பம் சேதமடைந்தது. சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பி தெரிகிறது.
வளைந்து நிற்கும் கம்பம் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். இதனால், குழந்தைகள், பெரியவர்கள் அவ்வழியே செல்ல முடியவில்லை. பலமுறை மின்வாரிய அலுவலர்களிடம் முறையிட்டும் இதுவரை கம்பத்தை மாற்றவில்லை.
பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

