தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜி.டி.நாயுடு பாலத்தின் கீழே அபாயம்? சாலை தணிக்கை நடத்த கோரிக்கை

ஜி.டி.நாயுடு பாலத்தின் கீழே அபாயம்? சாலை தணிக்கை நடத்த கோரிக்கை

ஜி.டி.நாயுடு பாலத்தின் கீழே அபாயம்? சாலை தணிக்கை நடத்த கோரிக்கை

2


UPDATED : செப் 21, 2026 06:13 PM

ADDED : செப் 21, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 06:13 PM ADDED : செப் 21, 2026 03:41 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:ஜி.டி.நாயுடு மேம்பாலத்தின் கீழே மக்களின் பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்ஸ்யூமர் காஸ் அமைப்பினர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:

அவிநாசி ரோடு ஜி.டி. நாயுடு மேம்பாலம் ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கீழே உள்ள சர்வீஸ் ரோடு பி.எஸ்.ஜி. டெக். அருகே திடீரென முடிகிறது. இது சாலையை பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அரவிந்த் கண் மருத்துவமனை அருகேயும் சேவை சாலை அரைகுறையாக உள்ளது. இறங்கு தளத்திற்கு அப்பால் சரியான சீரமைப்பான சேவை சாலை வழங்க வேண்டும்.

வெள்ளை கோடுகள் வழியாக மக்கள் சாலையை கடக்க ஏதுவாக வாகனங்களை ஓட்டுநர்கள் நிறுத்துவது இல்லை. ஆகவே, பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு ஆங்காங்கே சுரங்கப்பாதை உடனடியாக அமைக்க வேண்டும்.

திறப்புக்கு பிந்தைய விரிவான சாலை பாதுகாப்பு தணிக்கை நடத்த வேண்டியது அவசியம். தரைத்தள சாலை பகுதிகள், சேவை சாலைகள், பாதசாரி வசதிகள், நடைபாதைகள், தகவல் பலகைகள் உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us