ADDED : ஜூன் 27, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகர பகுதிகளில் உள்ள குளக்கரைகள் அலங்கரிக்கப்பட்டன. குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குமாரசாமி குளத்தில் நேற்று மீன்கள் இறந்து மிதந்தன.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘நகர் பகுதியில் உள்ள குளங்களில் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாகிவிட்டது. செல்வம்பதி, குளங்களை முறையாக பராமரிப்பதில்லை. இதே குளங்களில் மீனும் பிடிக்கின்றனர். குளங்களின் உயிர்ச்சூழலை பாதுகாக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
