ADDED : ஆக 22, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவை, கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கோபிநாதன். கடந்த, 19ம் தேதி ஆசாத் நகர், முத்து காலனி பகுதியில் ரோந்து சென்றார். அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, ஆவணங்களை கேட்டார்.
வாகனத்தில் வந்த மூவரும் அவரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். எஸ்.ஐ.,புகாரில், கரும்புக்கடை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஜாகீர், நாசர், மணிகண்டன் ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் தேடுகின்றனர்.