/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழுதடைந்த பள்ளிக்கு ரூ.1.15 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு
/
பழுதடைந்த பள்ளிக்கு ரூ.1.15 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு
பழுதடைந்த பள்ளிக்கு ரூ.1.15 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு
பழுதடைந்த பள்ளிக்கு ரூ.1.15 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு
ADDED : செப் 17, 2024 11:24 PM
கோவை : கோவை மாநகராட்சி, 76வது வார்டு, தெலுங்குபாளையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 1.95 ஏக்கர் பரப்பளவில், 7,500 சதுரடியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. 0.95 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளையாட்டு மைதானம் இருக்கிறது.
இப்பள்ளியில், 266 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி கட்டடம், 72 ஆண்டுகள் முன் கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இப்பள்ளியை நிர்வகித்தவர்களால் தொடர்ந்து பராமரிக்க இயலாததால், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்விடத்தை கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இப்பள்ளி மாணவ, மாணவியர் நலன் கருதி, தனியார் நிறுவன சமுதாய பொறுப்பு நிதியை பயன்படுத்தி, வகுப்பறை கட்டி, மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
ரூ.1.15 கோடியில், 6,818 சதுரடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன், 10 வகுப்பறை, அலுவலக அறை கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் ரங்கநாயகி துவக்கி வைத்தார்.
துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, கல்வி குழு தலைவர் மாலதி, உட்பட பலர் பங்கேற்றனர்.