தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காய்கறி வரத்து குறைவு மொத்த விலை உயர்வு

காய்கறி வரத்து குறைவு மொத்த விலை உயர்வு

காய்கறி வரத்து குறைவு மொத்த விலை உயர்வு


ADDED : ஜூன் 22, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்த நிலையில், மொத்த விலை உயர்ந்து காணப்பட்டது.

கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) -–- 350, தேங்காய் ஒன்று – 20, கத்திரிக்காய் கிலோ – 55, முருங்கைக்காய் -–- 90, வெண்டைக்காய் – 45, முள்ளங்கி – 20, பூசணிக்காய் – 15, அரசாணிக்காய் – 12, பாகற்காய் – 55, புடலை – 17, சுரைக்காய் – 28, பீர்க்கங்காய் – 60, வெள்ளரிக்காய் – 30, அவரைக்காய் – 90, பீட்ரூட் – 30, மற்றும் பச்சை மிளகாய் – 50 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த, இரு வாரங்களை காட்டிலும், நேற்று தேங்காய் ஒன்று – 3, முருங்கைக்காய் கிலோ – 60, வெண்டைக்காய் – 7, பூசணிக்காய் – 5, பாகற்காய் – 23, சுரைக்காய் – 13, பீர்க்கங்காய் – 2, வெள்ளரிக்காய் – 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

அரசாணிக்காய் கிலோ – 3, புடலை – 8, பீட்ரூட் – 10 மற்றும் பச்சை மிளகாய் – 30 ரூபாய் விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், ‘மார்க்கெட்டில் நேற்று, அனைத்து காய்கள் வரத்தும், குறைவாக இருந்தது. தற்போது மழை பெய்வது குறைந்துள்ளதால், வரும் நாட்களில் காய்கறி வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது,‘ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us