/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரிக்கை
/
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரிக்கை
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரிக்கை
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 11:36 PM
கோவை : கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், விதிகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஏப்., 22 முதல் மே 20ம் தேதி வரை, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக, அனைத்து தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் அறிவிப்புகள் வைக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என்றும், இந்த சேர்க்கை முறையை கண்காணித்து விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
பள்ளியில் இருந்து ஒரு கி.மீ., தொலைவுக்குள் உள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்ற அரசாணையை மாற்றி, ஒரு கி.மீ., தொலைவுக்குள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கியும், அந்த எல்லைக்குள் சேர்க்கை எண்ணிக்கை பூர்த்தியாகாவிட்டால் இருப்பிடத் தொலைவை அதிகரித்து, சேர்க்கை நடத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவுப்படி, அரசாணை வெளியிட வேண்டும்.
மத்திய அரசு பாடத்திட்ட பள்ளிகளையும், தமிழ்நாடு சேர்க்கை இணையதளத்தில் கொண்டு வந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளின் நுழைவாயிலில், 25 சதவீத ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகள் வைக்கப்படுவதை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

