/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேரோட்ட வீதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை
/
தேரோட்ட வீதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை
ADDED : ஏப் 24, 2024 10:40 PM
உடுமலை : உடுமலையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கும் வீதிகளில், டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. சுற்றுப்பகுதி கிராமங்கள், பிற மாவட்டங்களிலிருந்தும் மக்கள் தேரோட்டத்தை காண நகரில் திரண்டு வருகின்றனர்.
தேரோட்டம் கோவிலில் துவங்கி பொள்ளாச்சி ரோடு, தளிரோடு, குட்டைத்திடல், நெல்லுக்கடை வீதி, தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் கோவிலுக்கு திருத்தேர் வந்தடைகிறது.
பொதுமக்கள் தேரோடும் வீதிகளில் நின்று பார்வையிடுகின்றனர். இதில், பசுபதி வீதியில் தளிரோடு அருகில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
திருவிழாவையொட்டி, இப்பகுதியில் 'குடி'மகன் களின் கூட்டமும் அதிகமாக இருக்கும். இதனால், பொதுமக்கள் நிம்மதியாக அவ்வழியாக வந்துசெல்ல முடியாமலும், பாதுகாப்பில்லாமலும் உள்ளது.
தேரோட்டத்தையொட்டி, தற்காலிகமாக இன்று தேரோட்ட பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

