/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் பழைய கட்டடம் இடிப்பு
/
ரயில்வே ஸ்டேஷனில் பழைய கட்டடம் இடிப்பு
ADDED : செப் 17, 2024 04:48 AM

பொள்ளாச்சி: ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டது.
பொள்ளாச்சி -பாலக்காடு ரயில் வழித்தடத்தில், ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன், முக்கியத்துவம் வாய்ந்தது.மீட்டர் கேஜ் காலத்தில், பயணியர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், இந்த வழித்தடத்தில் நிறுத்தி இயக்கப்பட்டு வந்தன.
அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பின், இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த, ரயில்கள் நிறுத்தப்பட்டன. பாலக்காடு -திருச்செந்துார் ரயில் மட்டும், ஆனைமலை ரோடு ஸ்டேஷனில் நின்று செல்கிறது. இந்த ஸ்டேஷனில் பழைய கட்டடம் பராமரிப்பின்றி காணப்பட்டது. மேலும், புதிய கட்டடத்திலும் போதிய வசதிகள் இல்லாததால் பயணியர் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், பயன்பாடு இல்லாமல் இருந்த பழைய ரயில்வே ஸ்டேஷன் கட்டடம் மற்றும் பாழடைந்த குடியிருப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், புதிய கட்டடம், அனைத்து வசதிகளுடன் கட்டித்தர வேண்டும், என, ஆனைமலை ரயில் பயணியர் வலியுறுத்தினர்.