ADDED : ஜூலை 16, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
(படம் விக்னேஷ்)
கோவை, ஜூலை 17–
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மற்றும் சி.ஐ.டி.யு., சார்பில் சுங்கம்–1 கிளை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நல அமைப்பின் மாநில துணை தலைவர் சுரேந்திரன் தலைமையில் சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் கனகராஜ் உட்பட ஏராளமானோர் பணப்பலன்களை உடனே வழங்கு என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.
பொதுச் செயலாளர் அருணகிரிநாதன் கூறுகையில்,‘‘ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் 2018 முதல் பஞ்சப்படி வழங்கவில்லை. எனவே, ரூ.3,000 கோடி பஞ்சப்படி நிலுவையை உடனே அரசு வழங்க வேண்டும்,’’ என்றார்.
