/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
அரசு மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2024 01:36 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கம், பயிற்சி மருத்துவர்கள் சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா, இந்திய மருத்துவ சங்கத்தின் பொள்ளாச்சி கிளை தலைவர் டாக்டர் சவுந்தரராஜன் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கோல்கட்டா முதுநிலை மருத்துவ மாணவியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவ மாணவியருக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், அனைத்து மருத்துவர்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.