/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 10, 2024 02:11 AM

அன்னுார்:அன்னுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணிக்கு, பிற மாநிலங்களைப் போல் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.
டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணிக்கு உரிய தொகை வழங்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். கோட்டச் செயலாளர் அறிவுரை நம்பி முன்னாள் மாநில செயலாளர் அழகர்சாமி, மாவட்ட பிரச்சார செயலாளர் அமீர் ஹாசன், உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.