ADDED : ஜூன் 21, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் பைபாஸ் சாலை திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி, காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் -–- காரமடை ஒருங்கிணைந்த பைபாஸ் சாலை திட்டத்தை, மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; காலதாமதம் செய்து வருவதை கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் காரமடை சாலையில், திரையரங்கு அருகே, காங்., கட்சி கலை பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர மன்ற முன்னாள் தலைவர் சத்தியவதி தலைமை வகித்தார். பாபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரங்கராஜ், விவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மத்திய அரசையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
