அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 14, 2026 08:53 PM
அ நிறம் | அளவு
கோவை: வெள்ளக்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாணவர்களுக்கு மழை நீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தவும், டெங்கு பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் தங்களின் சுற்றுப்புறத்தில் தேங்காய் சிறட்டை, பிளாஸ்டிக் டப்பா, டயர் ஆகியவற்றை கண்டால் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறி அகற்ற வேண்டும். டெங்கு கொசு உருவாகும் பொருட்களை வெளியில் வைக்கக்கூடாது. காய்ச்சல் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
