/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி துணை கமிஷனர் இடம் மாற்றம்
/
மாநகராட்சி துணை கமிஷனர் இடம் மாற்றம்
ADDED : ஆக 06, 2024 07:03 AM
கோவை: கோவை மாநகராட்சி துணை கமிஷனர் உட்பட தமிழகம் முழுவதும், 20 வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை மாநகராட்சி துணை கமிஷனராக இருந்த செல்வசுரபி, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் கோவை முதுநிலை மண்டல மேலாளராக இருந்த ஜெயச்சந்திரன் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த ஜெய் பீம், சென்னை அரசு விருந்தினர் இல்லம் இணை மாநில மரபு அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
பரந்துார் தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த நாராயணன், நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். கோவை மாநகராட்சிக்கு புதிய துணை கமிஷனர் நியமிக்கப்படவில்லை.